வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Showing posts with label ஓஷோ. Show all posts
Showing posts with label ஓஷோ. Show all posts

Saturday, 6 May 2017

ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட சாந்தி தரும் ஒரு வார்த்தை மேல்


உங்கள் சாத்திரங்கள் முழுக்க வெறும் வார்த்தைகள் தான்

வார்த்தைகள் கொள்கைகள் சிந்தனை முறைகள்

உங்கள் மனதைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன.

மனித மனம் ஞானத்தை விட அறிவில் நாட்டம் அதிகம் கொண்டு இருக்கிறது.

கடவுள் அழகு சத்தியம் இவற்றை அனுபவிக்காமல் தெரிந்து கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டு உள்ளன.

அன்பு உனக்குள்ளேயே இருப்பது.

எதற்கு அதைப் பற்றி தெரிந்து கொள்வது.

அதை பெருக்கெடுத்து ஓட விடு.

மனிதன் வார்த்தைகளைப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கிறான்

அவைகள் உள்ளீடற்ற எந்தப் பொருளும் இல்லாத வார்த்தைகள்

ஆனால் படிப்பு அறியாமையை நீக்குவதில்லை

ஒளியைப் பற்றி தெரிந்து இருந்தாலே
இருட்டு விலகி விடாது

இருட்டை விரட்டி அடிக்க ஒரு சின்ன மெழுகு வர்த்தியே போதும்

உங்களுடைய மனதை நிறைத்து வைத்திருப்பவை வெறும் வெற்று வார்த்தைகள் தான்

வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு கடவுளை எனக்குத் தெரியும் என்று நினைப்பதில் அர்த்தம் இல்லை.

கடவுளை புரிந்து கொண்டு கடவுள் என்ற வார்த்தையை சொல்லும்போது பிரகாசமான ஒளி நிறைந்து இருக்கும்

நீங்கள் வெற்று வார்த்தைகளில் இருந்து விடுபடும் வரை உங்கள் தேடுதலால் பயனில்லை.

எந்த வார்த்தை பிரகாசமானது எது சாந்தி தரும் வார்த்தை.

அது எப்போதும் வெளியே இருந்து வருவதல்ல.

நீ ஆழமாக உள்ளே போகும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ தியானத்தில் இருக்கும்போது தான் அதைக் கேட்க முடியும்.

நீ ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ ஏகாந்தத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்.

- ஓஷோ.

மனமும் வாழ்கையும் - ஓஷோ


மனம் என்பது பொறுமையில்லாதது.

ஆனால் வாழ்க்கை பொறுமையானது.

மனம் என்பது பொறுமையில்லாதது.

ஆனால் இந்த இயற்கை பொறுமையானது.

மனம் என்பது தற்காலிகமானது.

வாழ்க்கை என்பது முடிவில்லாதது.

மனதிற்கு, எதிர்பார்க்க, ஆசைப்பட, உணர, சாதிக்க என்ற வரையறைகள் உண்டு.

ஆனால் வாழ்க்கைக்கு வரையறைகள் இல்லை.

அது போய்க்கொண்டே இருக்கும்.

அது முடிவில்லாத செயல்முறை.

எதிர்காலத்தில் நமது ஆசைகள் சில பூர்த்தியாக வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருப்பதால் நமது மனம் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளது.

வாழ்க்கையின் எல்லையற்ற நிலையை, அதன் எல்லைகளற்ற செயல்முறையை பார்க்கின்ற ஒருவர் திருப்தியுடன் இருப்பார்.

அது ஒரு பாதுகாப்பான எண்ணம் இல்லை.

இது ஞானம்.

- ஓஷோ.

யார் இந்த கடவுள்? அவர் எப்படி இருப்பார்?


ஒவ்வொரு சமுதாயமும்,

சமூகமும்,நாகரிகமும்,தனக்கென சொந்தமான கடவுளைக் கண்டுபிடித்துக் கொள்கிறது.

"கடவுள் தனது சொந்த உருவத்தில் மனிதனைப் படைத்தான்,"

என்று அவர்கள் கூறுகின்றனர்.

அது முற்றிலும் தவறானது.

மனிதன்தான் தனது சொந்த உருவத்தில் கடவுளைப் படைத்திருக்கிறான்.

மேலும் இந்த உலகில் அநேக விதமான மக்கள் இருப்பதால்,

கடவுளின் அநேக விதமான உருவங்களும் உள்ளன.

கடவுள் என்பது ஓர் ஆள் அல்ல.

ஆனால் அது ஒருவிதமான இருப்புநிலை மட்டுமேயாகும்.

இந்த உலகத்தை படைத்த ஏதாவது ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை நான் காணவில்லை.

இந்த இயற்கையில் இறைத்தன்மையின் குணத்தை நான் நிச்சியமாக அனுபவிக்கிறேன்.

ஆனால் அது ஒரு குணத்தன்மை தானே தவிர அது ஓர் ஆள் அல்ல.

இது உனது மனதைக் காயப்படுத்தும்.

ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

உள்ள உண்மையை உள்ளபடி நான் கூறியாக வேண்டும்.

கடவுள் என்பது ஓர் ஆள் அல்ல,ஆனால் அது ஒரு விதமான இருப்புநிலை மட்டுமேயாகும்.

நான் இருப்புநிலை என்று கூறும்போது மிகவும் கவனமுடன் இரு,

ஏனெனில் நீ உனது கட்டுத்திட்டத்திற்கு ( Mind conditioning)

ஏற்றார் போல கேட்டுக்கொண்டே போகலாம்.

பொருள் போன்ற ஏதோ ஒன்று இருப்பு நிலையில் உள்ளதாக கூட உன்னால் செய்ய முடியும்.

அப்படி செய்தால் நீ மீண்டும் அதே பொறியில் சிக்கிக் கொள்வாய்.

உனது உயிர் உணர்வின் உள் மையத்தில் கடவுள் ஓர் இருப்பு நிலையில் இருக்கிறார்.

அது உனது சொந்த இருப்பு நிலைதான்.அது நீ யாரோ ஒருவரை சந்திப்பது போன்றது அல்ல.

எனவே நான் கடவுள் இல்லை என்று நான் கூறும்போது இதை நினைவில் வைத்துக்கொள்.

அதாவது நான் உண்மையிலேயே இந்த இயற்கையானது அதனளவில் போதுமானதாக இருக்கிறது என்றுதான் அர்த்தம் கொள்கிறேன்.

அதற்கு படைத்தவன் தேவையில்லை.படைப்பு இருக்கிறது

ஆனால் படைத்தவன் இல்லை.

படைப்பிற்கும் படைத்தவனுக்கும் இடையே உள்ள பிரிவினை நீக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு மட்டுமே தியானத்தின் சிகரங்களுக்கு உன்னால் எழுந்து செல்ல முடியும்.

அப்படி இல்லை எனில் நீ கடந்த காலத்தின் குழந்தைத்தனமான வகைகளில் மாட்டிக் கொண்டு அப்படியே இருப்பாய்.

கோயில்களில் தேவாலயங்களில்,யூத மத கோயிலுக்குள் உருவங்களுக்கு முன்னால் மண்டியிட்டுக் கொண்டு எல்லாவிதமான முட்டாள்தனமான விஷயங்களையும் செய்து கொண்டு இருப்பாய்.

மேலும் அந்த முட்டாள்தனமான விஷயங்கள் ஆயிரக்கணக்கான மற்றவர்களாலும் செய்யப்படுவதால்,

அவை முட்டாள்தனமானவை என்பதை உன்னால் ஒருபோதும் உணர்ந்து கொள்ள முடியாது.

- ஓஷோ.

ஓஷோவின் துறவு விதிகள்


1.  விழிப்புணர்வு நுட்பான உணர்தலைக் கொண்டு வருகிறது, ஆகவே அது துவக்கத்தில் அதிக வலியையும், இறுதியில் பரவசத்தையும் கொடுக்கிறது.

2. சோம்பேறித்தனம் சக்தியற்ற நிலை, செயல் குறிக்கோள் உடையது. வெறும் சக்தியாக இருந்து கொண்டிருப்பது முயற்சியற்ற செயலைக் கொண்டுவருகிறது.

3. பதட்டம் தப்பிக்கும் ஆசையை கொடுக்கிறது, இதுதான் மூழ்கடிக்கிறது, பின் இதிலிருந்து ஈகோ பிறக்கிறது.

4. தன்ணுணர்வின் நிழலாகவே உன் தனிப்பட்ட உலகம் இருக்கிறது. இதைக் கண்டுகொள், துறக்க வேண்டிய அவசியமில்லை.

5. உள்முகமாகத் திரும்புவது தப்பித்தல் அல்ல. அது அமைதியாக வாழ்வது.

6. உள்ளே – வெளியே என்றும், ஆன்மா – பொருள் என்றும் இல்லை.

7. வாழ்வு பிரிக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது.

8. அன்பு அடுத்தவருக்கு சுதந்திரம் தரும். அன்பு பொறுப்பைக் கொடுக்கும்.

9. தன்ணுணர்வோடு வாழ்வை அனுபவிப்பதே ஓஷோவின் ஒழுக்கம்.

10. குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.


- ஓஷோ.

தியானம் எப்படி இருக்க வேண்டும்


உங்கள் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக இருக்கிறது.
இப்பொழுது உங்கள் மனம் தியானம் செய்ய விரும்புகிறது.
இது உண்மையான தியானமல்ல, இது
பரபரப்பான தன்மைக்கு எதிரானது.

நீங்கள் பரபரப்பான தன்மையில் இருப்பதால் தியானம் கவர்ச்சிகரமாக ஆகவிட்டது.

சில நாட்கள் தியானம் செய்கிறீர்கள்
உங்கள் மனம் அமைதி அடைந்து விட்டது.

இப்பொழது மனம் அமைதியில் சலிப்படைந்து விட்டது. பரபரப்பாக ஏதாவது செய்ய விரும்புகிறது.

இது தியானத்திற்கு எதிராக மனம் எடுக்கின்ற முடிவு.

இது போன்ற எதிரும் புதிருமான துருவங்களுக்குச் செல்லும் விளையாட்டை கடந்து செல்வதே தியானம்.

சரியாக புரிந்து கொள்ளுதலே இவைகளை கடந்ததாக ஆகி விடுகிறது.

மனம் எப்பொழுதும் உங்களை எதிரானதற்கே அழைத்துச் செல்லும்

மனம் செய்யும் இந்த மாயவித்தையை மையத்தில் நின்று கவனியுங்கள்.

பரபரப்பான தன்மையை உற்று கவனியுங்கள்,  பரபரப்பை தொடர்ந்து வரும் தியான எண்ணத்தையும் உற்று கவனியுங்கள்.

இவை இரண்டும் எப்படி உறவு கொண்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால்  தியானம் உங்களுக்கு நிகழும்.

மனதின் நுட்பத்தை புரிந்து கொள்ளுதலே மாற்றமடையச் செய்யும்.

பிறகு உடனடியாக கடிகாரம் நின்று விடுகிறது,  காலம் மறைந்து விடுகிறது.

கடிகாரம் நின்றவுடன் மனம் நின்று விடுகிறது.

படகு வெறுமையாக இருக்கிறது.

- ஓஷோ.