வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Monday, 6 June 2016

ஞானம் என்றால் என்ன?



தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப்பெரிய ஞானம். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கின்றனர் புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள். அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.

அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிஷதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல. 

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?



காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார்.



அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.


மலர்களும் மருந்தாகும்



இலுப்பைப் பூ


இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.



ஆவாரம் பூ



ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.


உடல் வாயுக்கள்



திருமந்திரம்: 3.7. தாரணை

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் 
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

1. பிராண வாயுவானது மூலத்தின்மேல் தொடர்ந்து ஓங்கி பன்னிரண்டு அங்குலம் வெளிப்பையும்.

2. அபானன் வாயு மல சலத்தை அறிந்து போக்கும்.

3. வியானன் வாயு உண்ட சாரத்தைப் பிரித்தெழுப்பி எழுபத்தீராயிரம் நாடிக்கு ஊட்டும்.

4. உதானன் வாயு அவற்றை செரிப்பிக்கும்.

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு


நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

சதுரகிரி அதிசயங்கள்


நோய் தீர்க்கும் மலை:

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை" என்கின்றனர்.

சனி நீராடு? ஏன்?, எதற்கு?



சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம். நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி நீராடு" என்பது பிரபலமான சொல்லாடல், ஏன் புதன் சனி நீராடு என்கிறார்கள்?