வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Friday 1 July 2016

அஷ்டமா சக்திகளுக்கான மூலிகைகளை பயன்படுத்தும் விதம்



இந்த கட்டுரையின் உள்நோக்கம்: இந்த தெய்வீக கலையின் அதியற்புத மேன்மைதனை உணரும் அன்பர்கள் இந்த தெய்வீக கலையின்பால் ஈர்க்கப்பட்டு இதனை கற்க முற்பட்டுவார்கள். அதனால் அவர்கள் நல்லதொரு குருவை தேடி அடைவார்கள். இந்த கலையினை உயிரென கற்று தேர்வார்கள். அதன்பயனாக அவர்கள் வாழும் ஊர் சிறப்புறும், ஒரு ஊர் சிறப்புற்றால், ஒரு நகரம் சிறப்புறும், ஒரு நகரம் சிறப்புற்றால், ஒரு மாநிலம் சிறப்புறும், ஒரு மாநிலம் சிறப்புற்றால், ஒரு நாடு சிறப்புறும், ஒரு நாடு சிறப்புற்றால் படிப்படியாக இந்த உலகமே அற்புத மாற்றம் காணும் என்கிற பேராசையினால் இந்த கலையின் மிக உள்ளார்ந்த சூட்சும ரகசியங்களைத் தவிர்த்து மற்றதை இங்கே பதிவிடுகின்றேன். 


இதுவரை இவ்வளவு விரிவாக யாரும் எழுதவில்லை என்பது உங்களுக்கே தெரியும். காரணம், அந்த அதி சூட்சும ரகசியங்களை மகாகுருவானவர் தொட்டு உணர்த்துவார், தழுவி உணர்த்துவார், பார்த்து உணர்த்துவார். இதனை இராமாயணத்தில் மகா குரு ஸ்ரீ ஸ்ரீ வால்மீகியானவர், ஸ்ரீ ஸ்ரீ ராமர் பெருமான் மூலமாக, 

பார்த்து உணர்த்தியது - சீதைக்கு (நயன தீக்கை), 
தொட்டு உணர்த்தியது - அகலிகைக்கு (ஸ்பரிச தீக்கை), 
தழுவி உணர்த்தியது - குகனுக்கு (ஆலிங்கன தீக்கை)
என மூன்று நிலைகளை உலகிற்கு அருளிச் செய்தார்கள்.

அது ஒவ்வொருவர் தேக ஆரோக்கியம் மற்றும் பயிற்சியின் நிலைகளை பொறுத்து அமைகிறது. இந்த தெய்வீக கலையின் உள்ளார்ந்த சூட்சும நிலைகள் அனைத்தும் ஸ்தூல தேகத்தின் உள் நிலையையே சார்ந்து இருப்பதால், ஸ்தூல தேகத்தினை முழுமையாக ஆராய்ந்தே பயிற்சியின் முதிர்வு வெளிப்படுகிறது. ஆதலால் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணாக்கர்கள் ஸ்தூல தேகத்தினை முழுமையான சுத்தத்துடன் பராமரித்தல் மேலதிக அவசியமாகின்றது.

எண்ணங்களில் தூய்மையும், பக்தியும், சாந்தமும் மிக அவசியம். கோபம், காமம், போதை வஸ்துகள், எரிச்சலடையும் தன்மை, முன் கோபம், முரட்டு குணம், எதிர்வாதம், முரண்வாதம், காழ்ப்புணர்ச்சியுடன் சமயம் பார்த்து இருத்தல், உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்தல், மறைவாக தவறு செய்தல், பெண்களை பயமுறுத்தி உறவு கொள்ளுதல், நைசாக பேசி உறவு கொள்ளுதல், தன்னிடம் மகாசக்தி இருப்பதாக சொல்லி உறவு கொள்ளுதல், பிற பெண்களுடன் வைத்துக்கொள்ளும் தவறான உறவுகள் போன்ற பழக்க வழக்க குணங்களை அறவே கலைந்திடல் வேண்டும். (இதுவரை இருந்தால்).

இது போன்ற தவறான பழக்கங்களுடன் இந்த தெய்வீக கலையை பயில்வோர், தீர்க்க முடியாத தோஷங்களோடும், குலத்திற்கே நாசம் விளைவிக்கும் பிள்ளைகளை பெற்றும், வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மரணம் வந்தால் போதும் என்று எண்ணும் எண்ணத்துடனே வாழ்வார்கள். மேலும் சொப்பனஸ்கலிதம் (உறக்கத்தில் விந்து வெளியேறுதல்), தவறான தனது செய்கைகள் வாயிலாக விந்துவை வெளியேற்றுதல் போன்றவை மாணாக்கனின் உயர்வு நிலையின் எல்லா வழிகளையும் மூடிவிடும். 

பழமொழி: விந்து விட்டவன் நொந்து கெட்டான். 

காம எண்ணங்களையும், காம எழுச்சியை தூண்டும் காட்சிகளையும், காமத்தை தூண்டும் விதமான பேச்சுகளையும் அறவே தவிர்க்கவேண்டும். அது போன்ற எண்ணங்களை பேசி உருவாக்கும் நண்பர்களிடமிருந்து விலகுங்கள். இவை கொஞ்சமே, இதனைப் போல இன்னும் பல நுணுக்கமான உள்ளார்ந்த ரகசிய அறிவுறுத்தல்கள் உள்ளது. இதனை ஒரு குரு உடனிருந்து கற்றுத் தருதல் அவசியம். குரு வேண்டும் என்று சொல்வது அதற்குதான். 

மேலும் இது இன்ஸ்டன்ட் காலம், அதைப்போல இன்று துவங்கி நாளை உங்களிடம் மாற்றங்கள் தோன்றாது, மெல்ல மெல்லதான் எல்லாம் மாறும் பொறுமையும், விடாமுயற்சியும், தீவிர பயிற்சியும் மிக அவசியம். இன்றைய காலச் சூழலில் ஏதோ ஒரு வகையில் சுயமாக பாதிக்கப்பட்டவர்கள், இதனை கற்றுக்கொண்டோ அல்லது இதனை கற்றவர் மூலமாகவோ தனது எதிர்ப்பாளர்களை (விரோதிகளை) அது, மனைவி, மகள், மகன், அப்பா, அம்மா, சகோதர, சகோதரி என தனது உற்றார் உறவினருக்கு, நண்பர்களுக்கு அல்லது வேறு நபருக்கு ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தல் தர எண்ணுகிறார்கள். அவ்வாறு செய்வது உங்களுக்கு கடும் தோஷ பிணிகளை ஏற்படுத்தும். எனவே தவறான எண்ணங்களை கைவிடுங்கள். இதனை படித்து இதன் தெய்வீக தன்மையை புரிந்து இந்த அதியற்புத தெய்வீக கலையை நன்கு உணர்ந்து இதனை பயிலுங்கள், உயருங்கள், நீங்கள் உயரவேண்டும் என்பதே எனது குறிக்கோள். 

ஸ்படிகம் போன்ற தெளிந்த மனமும், தீவிரமான பயிற்சியும் ஒரு தெய்வீக குருவை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். குருவே உங்களை தேடி வரும்வரை பயிற்சியில் இருங்கள். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, இந்த தெய்வீக கலையின் அருமையை தெரிந்து, முழுமையாக யோகப்பயிற்சி பெற்றவர்கள், அதனை உயிர் மூச்சென உணர்ந்தவர்கள், யாருக்கும் எந்தவிதமான மந்திர துஷ்ப்ரயோகமும் செய்ய முன் வரமாட்டார்கள். அப்படி வருபவர்கள் கலையை முழுமையை அறியாதவர்களாகவே இருக்கமுடியும், அவர்களால் உங்கள் அபிலாஷையை நிறைவேற்ற முடியாது, ஆனால் முடித்து தருவதாக சொல்லிச் சொல்லி உங்களின் பணத்தை வாங்கிக் கொள்வார்கள். கடைசியாக ஏதாவது ஒரு காரணம் சொல்லி முடியாது என்பார்கள். முக்கியமாக நீங்கள் செய்த ஏதாவது காரியம் ஒன்றை சொல்லி அதுதான் காரணம் என்று கூறுவார்கள், பழியை உங்கள் மேலேயே போட்டு விடுவார்கள், நீங்களும் செய்ய சொன்ன வேலை தப்பானது என்பதால் இதனை யாரிடமும் சொல்லமாட்டீர்கள், இப்படித்தான் இன்றைய சித்தும், யோகமும் போகின்றது. யோகமும், சித்தும், மந்திரமும், மாந்திரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள். 

"இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும், எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்"

பணத்திற்காக பிறருக்கு தொல்லை தருபவர்கள் மிக மோசமான மறுபிறவிக்கு இன்றே பதிவு செய்கிறார்கள் என்பதனை மறக்க வேண்டாம். ஆகவே தவறான சிந்தனையை கனவிலும் எண்ண வேண்டாம்.

இப்போது மூலிகைக்கு வருவோம்:

ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும், நட்சத்திரமும், மந்திரமும் உண்டு. மூலிகை சாபம் நீக்கவும், எடுக்கவும் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். ஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் அதற்குரிய மந்திரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அவையாவன:

வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் " ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் " கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து " ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி " என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து " வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை " ஓம் கிலியுஞ் சவ்வு மஹி " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
******

மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை பறிக்கும் முன் " மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் " ஓம் தேவ மோகம் வருக வருக " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை பறிக்கும் முன் " ஓம் தேவ மோகம் வருக வருக " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
******

உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி " சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு, தீபம் காட்டி " அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி, " ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
*******

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி, " சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.(ஜலஸ்தம்பனம்)

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி) எனும் மூலிகையை பறிக்கும் முன், " நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.(சுக்லஸ்தம்பனம்) 

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி, " ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.(ஜெயஸ்தம்பனம்) 
 *******

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி, " சர்வ ஆகமுஷ்ணி சுவாகா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி, " சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி, " சர்வ சித்த மோகினி, சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
*******

பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று " அரி அர தேவி, பிரம தேவி சர்வ தேவியே தீர் " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை திருவாதிரை அன்று காப்பு கட்டி, " சீறியுங் கீறியுங் சீறியும் " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை புதன் கிழமை அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும், " பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும். 
*******

மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து, " சரவணபவா நமா " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)

மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை மன மகிழ்வுடன் பூஜை செய்து காப்பு கட்டி, " விருகனீ விஷதரி " என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து, அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சில காரணங்களுக்காக எல்லாவித மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை. முழு விபரமும் அறியவும், பயன்படுத்தும் முறை தெரியவும், தகுந்த குரு வேண்டும். பயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார். ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர்...

அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது:

வசியம் - ஞாயிறு, 
மோஹனம் - திங்கள், 
பேதனம் - செவ்வாய், 
ஸ்தம்பனம் - புதன், 
உச்சாடனம் - வியாழன், 
ஆக்ருஷ்ணம் - வெள்ளி, 
மாரணம் - சனி 
உகந்ததென்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது…

வசியம் - கிழக்கு, 
மோகனம் - வடக்கு, 
பேதனம் - வடகிழக்கு, 
ஸ்தம்பனம் - தென்மேற்கு, 
உச்சாடனம் - வடமேற்கு, 
ஆக்ருஷ்னம் - மேற்கு, 
மாரணம் - தெற்கு 
என உபதேசிக்கின்றார்.

மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார்.

தீபங்களையும், மந்திரங்களையும் குறிப்பிடும்போது:

கிழமை: ஞாயிறு,
வஸ்திரம்: சிவப்பு பட்டு, 
திசை: கிழக்கு நோக்கி வில்வ மரப் பலகையில் அமர்ந்து, 
திரி: தாமரை நூல்,
நெய்: காராம் பசு (கருத்த நிற முள்ள பசு) 
நெய் தீபம் ஏற்றி "யநமசிவ" என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய வசியம் சித்திக்கும். 

கிழமை: திங்கள், 
வஸ்திரம்: மஞ்சள் பட்டு, 
திசை: வடக்கு நோக்கி மான் தோலில் அமர்ந்து, 
திரி: கன்னி நூல், 
எண்ணை: நல்லெண்ணெய்
தீபம் ஏற்றி "மசிவயந" என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும்.

கிழமை: செவ்வாய், 
வஸ்திரம்: சாதாரண வெள்ளை, 
திசை: வடகிழக்கு நோக்கி பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து, 
திரி: கந்தல் துணி, 
எண்ணை: புன்னை எண்ணை
தீபம் ஏற்றி "யவசிநம" என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும்.

கிழமை: புதன், 
வஸ்திரம்: சாதாரண பட்டு, 
திசை: தென்மேற்கு நோக்கி ஆல மர பலகையில் அமர்ந்து, 
திரி: எவ்விதமான திரியும், 
எண்ணை: ஆதளைக் கொட்டை எண்ணை
தீபம் ஏற்றி "நமசிவய" என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும்.

கிழமை: வியாழன், 
வஸ்திரம்: பச்சை பட்டு, 
திசை: வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து, 
திரி: இலவம்பஞ்சு, 
எண்ணை: புங்க எண்ணை
தீபம் ஏற்றி "வயநமசி" என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும்.

கிழமை: வெள்ளி, 
வஸ்திரம்: சாதாரண பட்டு, 
திசை: மேற்கு நோக்கி சண்பக மர பலகையில் அமர்ந்து, 
திரி: வெள்ளெருக்கு நார், 
எண்ணை: ஏரண்டத்தெண்ணை
தீபம் ஏற்றி "வசியநம" என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும்.

கிழமை: சனி, 
வஸ்திரம்: சாதாரண பட்டு, 
திசை: தெற்கு நோக்கி அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து, 
திரி: வேலிப்பருத்தி, 
எண்ணை: வேப்ப எண்ணை
தீபம் ஏற்றி "யசிவநம" என்ற மந்திரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.

சில சூட்சும வார்த்தை விளக்கங்கள்:

கன்னி நூல் காப்பு கட்டி என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன்) தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது.

மஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து, அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.

பொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம்:

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய, தேவ முனி, அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா" என்பதாகும்.

அன்பிற்குரிய நண்பர்களே, யோகமும், சித்தும், மந்திரமும், மாந்திரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

"இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும், எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்"

0 Comments:

Post a Comment