வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Monday 6 June 2016

சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்


பண்டையச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். 

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். 

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். 

பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயு தொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். 

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். 

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். 

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். 

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். 

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.

சளி தொல்லை நீங்க தும்பைப் பூவை பாலில் கொதிக்க வைத்து குடிக்கவும்.

குறட்டை குணமாக 50 மில்லி நல்லெண்ணெய், 50 எண்ணிக்கை தும்பை பூ இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும்.

மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, காசக் கழலைகள், குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக 100 மில்லி தேன் 50 எண்ணிக்கை தும்பை பூ 50 நித்திய கல்யாணி பூ இரண்டையும் தேனில் ஊர வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டிவிதம் சாப்பிட குணமாகும்.

கருப்பை கட்டி கரைய 20 தும்பை பூ உடன் 5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.



0 Comments:

Post a Comment