June 06, 2016 Ponnuvel Pandian
தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப்பெரிய ஞானம். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கின்றனர் புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள். அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.
அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிஷதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.
முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டதாக யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது படிப்படியாக அனுபவத்தால் உண்டாவது. அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள் யாவும் உயர்வடைகின்றன.
ஒருவன் பெற்ற ஞானம், உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவான்.
இன்று புதிதாய் பிறப்போம்...
0 Comments:
Post a Comment