வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Monday 6 June 2016

உடல் வாயுக்கள்



திருமந்திரம்: 3.7. தாரணை

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் 
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

1. பிராண வாயுவானது மூலத்தின்மேல் தொடர்ந்து ஓங்கி பன்னிரண்டு அங்குலம் வெளிப்பையும்.

2. அபானன் வாயு மல சலத்தை அறிந்து போக்கும்.

3. வியானன் வாயு உண்ட சாரத்தைப் பிரித்தெழுப்பி எழுபத்தீராயிரம் நாடிக்கு ஊட்டும்.

4. உதானன் வாயு அவற்றை செரிப்பிக்கும்.

5. சமானன் வாயு அவற்றை சரிப்படுத்தும்.

6. நாகன் வாயு விக்கல், சோம்பல் இவைகளை உண்டாக்கும்.

7. கூர்மன் வாயு கண்ணில் நின்று இமைக்க செய்யும்.

8. கிரிகரன் வாயு - கோபத்தை உண்டாக்கும்

9. தேவதத்தன் வாயு கொட்டாவி, சிரிப்பு முதலியவைகளை உருவாக்கும்.

10. தனஞ்சயன் வாயு - உச்சி வாழ்ந்து அத்துமம் அடங்கிய பின் சிரசின் வழியாகப் போகும். அதுவரை உயிரை பாதுகாக்கும்.

"பிராணாயாமம்" (வாசி யோகம்) முறைப்படி பயிற்சி செய்து இவை பத்தும் சீர் செயவும். மணமான குரங்கை நிலை நிறுத்தி ஜெயம் அடைவீர்.

சரியான மூச்சு பயிற்சி என்பது "வாசி யோகமே" ஆகும்.

0 Comments:

Post a Comment