வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Search This Blog

Powered by Blogger.

Contributors

பட்டினத்தாரையே விமர்சித்த உலகம் இது

விமர்சிக்கும் உலகம் இது பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற...

Saturday 6 May 2017

பட்டினத்தாரையே விமர்சித்த உலகம் இது


விமர்சிக்கும் உலகம் இது பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது
தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி
அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது.

அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார். அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார்.

ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார்.

மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை
பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார்.

அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார்.

அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு
வெட்டு வெட்டினாள்.

பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

நீதி: எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

நற்றுணையவது நமசிவாயவே.

வினைப்பதிவின் கருவி - மகரிஷி


எண்ணம் நின்று விட்டால் நலமாக இருக்கும் என்று இயற்கைக்குப் பொருந்தா நினைவு கொள்ளவேண்டாம். உயிர் வாழும்போது, விழித்திருக்கும்போது, எண்ணங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது எண்ணங்களில்லையே, அதனால் என்ன பயன் பெற்று வருகிறீர்கள். மரணத்தில் எண்ணம் அடியோடு நின்றுவிடும். பிறகு என்ன உயர்வைக் காணமுடியும். எண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே முறைப்படுத்திப் பயன் கண்டு சிறப்படையுங்கள். தவத்தில் பழக்கும் எண்ணம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் சிறப்பளிக்கும்.

வாழ்த்துக் கூறுவதைப் பற்றிச் சில அன்பர்கள் வினா எழுப்புகிறார்கள். வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு ஒருவர் எனக்குத் தீங்கு இழைக்கிறார், துன்பம் தருகிறார் என்றால் அவரை எப்படி வாழ்த்த முடியும்? ஏன் அத்தகைய கொடுமையாளரை வாழ்த்த வேண்டும்? என வினவுகின்றனர். எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் அவர் விருப்பம்போல் செய்துவிட முடியாது. ஒவ்வொருவரிடத்தும் வினைப்பயன் பதிவுகள் உள்ளன.

அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி. தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்குத் துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம். பெரும்பாலும் இயற்கை வேற்று மனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக்கொண்டு வருகிறது.

ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்கிறார், அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை ஒருவர் வினைப்பதிவை வெளிக் கொணர இன்னொருவரைக் கருவியாக உபயோகிக்கின்றது என்றுதான் பொருள். எனவே, தீமை செய்தவர் தானே விரும்பி இன்னொருவருக்குத் துன்பம் அளித்தார் என்று கொள்வதைவிட துன்பம் கண்டவர் வினைப்பதிவை இன்னொருவர் இயற்கையின் ஒருங்கிணைந்த பேராற்றல் உந்துதலால் வெளிக்கொணர்ந்து நேர்செய்து விட்டார் என்று கொள்வதே சரியான விளக்கம்.

தனது விணைப்பதிவே இன்னொருவர் மூலமாகத் துன்பமாக விளைந்தது என்று உணர்ந்து கொண்டால் பிறர் மீது வெறுப்பு எவ்வாறு எழும்?

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும்


தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி. தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார்.

இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் – அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக, தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.

கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும். இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும். மற்ற எல்லாமே தியானம் என்ற பெயரில், நீ ஏதோ ஆன்மீக சம்பந்தமானது செய்து கொண்டிருக்கிறாய் என உன்னை ஏமாற்றும், நீ விளையாட கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைதான்.

இந்த உண்மையான தியானத்தில் நீ தவிர்க்க இயலாததையும் தாண்டி வந்து விடுவாய். பொய்யான யாவும் காணாமல் போய்விடும்.

ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள யாவும் பொய்யானது அல்ல. எது பொய்யானது இல்லையோ அது தவிர்க்க இயலாதது. தவிர்க்க இயலாததை நீ என்ன செய்யப் போகிறாய். நீ அதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய். அந்த தவிர்க்க இயலாதது தான் தியானம்.

தவிர்க்க முடியாததை பார்த்துக் கொண்டே இருந்தாயானால் பொய்யானது தானாகவே கரைந்து போய் விடுவதை தெளிவாக காண்பாய். உனது பொய்யான கனவுகளின், ஆசை மேகத்தின் பின்னால் மறைந்து இருந்த உண்மையான விஷயம் இப்போது தெளிவாக, மேலும் அதிக தெளிவுடன் உன் முன் நிற்பதை காண்பாய்.

எல்லாவற்றிற்கும் காத்திரு, காத்திருக்கப் பழகு


சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'.

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.


பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை
ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்
வாழப் பழகுவாய்.
இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
வாழக வளமுடன் வாழ்க வையகம்.

ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட சாந்தி தரும் ஒரு வார்த்தை மேல்


உங்கள் சாத்திரங்கள் முழுக்க வெறும் வார்த்தைகள் தான்

வார்த்தைகள் கொள்கைகள் சிந்தனை முறைகள்

உங்கள் மனதைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன.

மனித மனம் ஞானத்தை விட அறிவில் நாட்டம் அதிகம் கொண்டு இருக்கிறது.

கடவுள் அழகு சத்தியம் இவற்றை அனுபவிக்காமல் தெரிந்து கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டு உள்ளன.

அன்பு உனக்குள்ளேயே இருப்பது.

எதற்கு அதைப் பற்றி தெரிந்து கொள்வது.

அதை பெருக்கெடுத்து ஓட விடு.

மனிதன் வார்த்தைகளைப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கிறான்

அவைகள் உள்ளீடற்ற எந்தப் பொருளும் இல்லாத வார்த்தைகள்

ஆனால் படிப்பு அறியாமையை நீக்குவதில்லை

ஒளியைப் பற்றி தெரிந்து இருந்தாலே
இருட்டு விலகி விடாது

இருட்டை விரட்டி அடிக்க ஒரு சின்ன மெழுகு வர்த்தியே போதும்

உங்களுடைய மனதை நிறைத்து வைத்திருப்பவை வெறும் வெற்று வார்த்தைகள் தான்

வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு கடவுளை எனக்குத் தெரியும் என்று நினைப்பதில் அர்த்தம் இல்லை.

கடவுளை புரிந்து கொண்டு கடவுள் என்ற வார்த்தையை சொல்லும்போது பிரகாசமான ஒளி நிறைந்து இருக்கும்

நீங்கள் வெற்று வார்த்தைகளில் இருந்து விடுபடும் வரை உங்கள் தேடுதலால் பயனில்லை.

எந்த வார்த்தை பிரகாசமானது எது சாந்தி தரும் வார்த்தை.

அது எப்போதும் வெளியே இருந்து வருவதல்ல.

நீ ஆழமாக உள்ளே போகும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ தியானத்தில் இருக்கும்போது தான் அதைக் கேட்க முடியும்.

நீ ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ ஏகாந்தத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்.

- ஓஷோ.

மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி


மனத்தின் இந்த அலை இயக்கம், எப்பொழுதும், தூக்க நேரம் போக மற்ற நேரங்களிலிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் அதன் இயக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதை நிறுத்திவிட வேண்டும் என்று= சிலர் நினைத்தால் அது அறியாமைதான்.

முதலாவது மனத்தினுடைய தத்துவம் அறியாததனால் தான் அதை  நிறுத்திவிட வேண்டும் நினைக்கிறார்கள்.

மனத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைப்பதை விட அதை நல்ல முறையிலே பழக்கிவிட வேண்டும் என்று நினைக்கலாம்.

உதாரணமாக, மனம் அமைதியாக இருக்க வேண்டும், மனம் நிலைத்து இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அது நல்லது. நிறுத்திவிட வேண்டும் என்பது வேறு, நிலைத்து இருக்க வேண்டும் என்பது வேறு.


"அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கின் அசேதனம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அவறிந் தேனே"


மனம் துரியத்தில் செயல்படும் போது “நிலைபேற்றுநிலை” என்றும்,

துரியாதீதத்தில் வருகிறபோது “நிறைபேற்றுநிலை” என்றும் சொல்கிறோம்.

துரியாதீதத்தில் மனம் நிறைநிலை அடையும்.

அந்த நிலையே தவத்தில் கடைசியாக அடைய வேண்டியது.

நாம் அவ்வாறு தவத்தில் பழகி மனதைச் சாதாரணப் பொருளிலிருந்து உயிருக்கு கொண்டு வந்து, உயிரிலிருந்து பரத்துக்கு கொண்டு வந்து எல்லாமாக  மாற்றி எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்கப் பழகவேண்டும்.

அது தான் தவம், யோகம் என்பதும் அதுவே.


- வேதாத்திரி மகரிஷி.

மனமும் வாழ்கையும் - ஓஷோ


மனம் என்பது பொறுமையில்லாதது.

ஆனால் வாழ்க்கை பொறுமையானது.

மனம் என்பது பொறுமையில்லாதது.

ஆனால் இந்த இயற்கை பொறுமையானது.

மனம் என்பது தற்காலிகமானது.

வாழ்க்கை என்பது முடிவில்லாதது.

மனதிற்கு, எதிர்பார்க்க, ஆசைப்பட, உணர, சாதிக்க என்ற வரையறைகள் உண்டு.

ஆனால் வாழ்க்கைக்கு வரையறைகள் இல்லை.

அது போய்க்கொண்டே இருக்கும்.

அது முடிவில்லாத செயல்முறை.

எதிர்காலத்தில் நமது ஆசைகள் சில பூர்த்தியாக வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருப்பதால் நமது மனம் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளது.

வாழ்க்கையின் எல்லையற்ற நிலையை, அதன் எல்லைகளற்ற செயல்முறையை பார்க்கின்ற ஒருவர் திருப்தியுடன் இருப்பார்.

அது ஒரு பாதுகாப்பான எண்ணம் இல்லை.

இது ஞானம்.

- ஓஷோ.