வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

ஜீவ சமாதி என்ன என்று தெரியுமா?


சில நாட்களாக ஜீவ சமாதி குறித்து சில சான்றோர் பெருமக்கள் முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் தங்கள் அனுபவங்கள் குறித்து high tech ஆக விருந்து படைக்கிறார்கள்.

என் நண்பன் படித்து விட்டு, இது போன்ற அனுபவங்கள் பெறுவது சிரமமோ என்று தயங்கியபடியே கேட்டான்.

நண்பனுக்கு புரியும்படி விளக்கத்தை மிகவும் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக சொன்னதை இங்கு கூறுகிறேன்.

ஜீவ சமாதி என்றால் என்னவோ ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதே.

சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.

அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.

சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமதுவினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.

அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று நண்பன் கேட்டான்.

தியானம் என்றால் என்னவோ ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதே.

ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீ செய்தால் அதுவே தியானம்தான்.

One thing at one will என்று மகரிஷி கூறுவார்.

ஜீவசமாதியில, உனது கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உனது உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.

பிரபஞ்ச பேராற்றலும் உன்னோடு இணைந்து உனக்கு என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.

இவ்வளவுதானா? என்று நண்பன் கேட்டான்.

அவ்வளவுதான்.போட்டு குழப்பிக் கொள்ளாதே. எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய்,
அமைதியாக இயல்பாக உன் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்து. மற்றவை தானாக நடக்கும் என்றேன்.

இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம் எல்லோருமே விழிப்போடு இருக்கலாமே என்றுதான்.

இதையடைய நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வு தளமோ தேவையில்லை.

குருவே சரணம்,,,

0 Comments:

Post a Comment