வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

த்வைதம், அத்வைதம், வஷிஷ்டாத்வைதம், மகரிஷி சிந்தனை


நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்;  அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் ஒரு உணவுப் பெட்டியில் (Tiffen Box) உணவை எடுத்துச் செல்கிறீர்கள்.

இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு.  பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள்.

இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை;  உங்களுக்குள் சென்றுவிட்டது.  இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள்.

இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள்.  நீங்கள் யார்?  இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (essence) தானே?

அணு நிலையில் உடலும் ஒன்றே.  சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண்  மலர்ந்தது.  சில விண் துகள்கள் உடலாயின.  சில விண் துகள்கள் உணவாயின.

இதனால் உடலும் உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே.  இங்கு அத்வைதம் துவைதமாயிற்று.

1 மணிக்கு, நீங்கள் வேறு, அந்த உணவு வேறு.  5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள்.   1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக் கிரமம் (Process) இருக்கிறதே,  அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான்.

த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்கு சென்றடைகிறான்.

 இந்த செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத் வைதம்.  அதை தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், 'த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி' என்றும், 'அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி' என்றும், சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு.

எல்லாம் ஒன்று" என்பது அத்வைதம்.

ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று "மாறுபடுகிறது" என்பது த்வைதம்,

எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disinte-grating) அணுவாகி பின்னர் பாரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்."

- அருட்தந்தை,,,,

0 Comments:

Post a Comment