வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday 6 May 2017

மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி


மனத்தின் இந்த அலை இயக்கம், எப்பொழுதும், தூக்க நேரம் போக மற்ற நேரங்களிலிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் அதன் இயக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதை நிறுத்திவிட வேண்டும் என்று= சிலர் நினைத்தால் அது அறியாமைதான்.

முதலாவது மனத்தினுடைய தத்துவம் அறியாததனால் தான் அதை  நிறுத்திவிட வேண்டும் நினைக்கிறார்கள்.

மனத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைப்பதை விட அதை நல்ல முறையிலே பழக்கிவிட வேண்டும் என்று நினைக்கலாம்.

உதாரணமாக, மனம் அமைதியாக இருக்க வேண்டும், மனம் நிலைத்து இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அது நல்லது. நிறுத்திவிட வேண்டும் என்பது வேறு, நிலைத்து இருக்க வேண்டும் என்பது வேறு.


"அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கின் அசேதனம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அவறிந் தேனே"


மனம் துரியத்தில் செயல்படும் போது “நிலைபேற்றுநிலை” என்றும்,

துரியாதீதத்தில் வருகிறபோது “நிறைபேற்றுநிலை” என்றும் சொல்கிறோம்.

துரியாதீதத்தில் மனம் நிறைநிலை அடையும்.

அந்த நிலையே தவத்தில் கடைசியாக அடைய வேண்டியது.

நாம் அவ்வாறு தவத்தில் பழகி மனதைச் சாதாரணப் பொருளிலிருந்து உயிருக்கு கொண்டு வந்து, உயிரிலிருந்து பரத்துக்கு கொண்டு வந்து எல்லாமாக  மாற்றி எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்கப் பழகவேண்டும்.

அது தான் தவம், யோகம் என்பதும் அதுவே.


- வேதாத்திரி மகரிஷி.

0 Comments:

Post a Comment