வாசகர்கள் இங்கு மிக நல்ல தமிழ் குறுஞ்செய்திகளை வாசித்து மகிழவும். அதோடு அதை மற்றவர்களுக்கும் பகிரவும். இங்கு பல சமூக வலை தளங்களில் இருந்து பெறப்படும் நல்ல கருத்துள்ள குறுஞ்செய்திகள் வெளியிடப்படும். மற்றும் பல மருத்துவ குறிப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

Saturday, 6 May 2017

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை


எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப, அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

‘சஹஸ்ரநாமம்'  என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.

ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார்.

அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.

அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

“நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?

 நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார்.

திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?”

‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு;
இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர்.

அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்:

அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்...

அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.

இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது.

 எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.

ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.

ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...?

அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...?

ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்..

"பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம்.

அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர்.

அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

“அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ!  அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?'  என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.

பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்!

இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார்.

பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.

அவன் சொன்னது கீதை;  கேட்பது சஹஸ்ரநாமம்.

இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.

பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார்.

"பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர்.

'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள்.

"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும்
போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா?
அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்...

அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!

சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..?

அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது.

சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது.

"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.

இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது.

கீதையைச் சொன்னது பகவான்.

அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம்.

பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!

நாராயண! நாராயண!

ஆதி சங்கரர் அருளிய வைராக்ய ஸ்லோகங்கள்


ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்....
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று....
அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு  #வேதமறிந்த பண்டிதனாக  இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்கிரதை சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்....
அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான். ''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ,இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?''காவல் காரன் நடுங்கினான்..... ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக? முதல் நாள் இரவு பையன் ''ஜாக்கிரதை. ஜாக்கிரதை '' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது.அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

#‎ஸ்ரீஆதிசங்கரர்   அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

(1)
माता नास्ति पिता नास्ति नास्ति बन्धुः सहोदरः।
अर्थँ नास्ति गृहँ नाति तस्मात् जाग्रत जाग्रत॥

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

There is no mother, no father, no relationships nor any siblings. No money or house. Therefore be alert, Wake up!

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,...

(2)
जन्म दुःखँ जरा दुःखँ जाया दुःखँ पुनः पुनः।
सँसारसागरँ दुःखँ तस्मात् जाग्रत जाग्रत॥

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

Birth is sorrow, aging is sorrow, spose is sorrow !
Samsara itself is sorrow, therefore remain awake! be alert!

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,
விழித்துக்கொள் ஜாக்ரதை....

(3)
कामक्ष्च क्रोधक्ष्च लोभक्ष्च देहे तिष्ठन्ति तस्कराः।
ज्ञनरत्नापहाराय तस्मात् जाग्रत जाग्रत॥

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

Kama (desires), Krodha (Anger), Lobha (Greed) are like theifs in this body who steal the jewel called "Jnana" [Self Knowledge]. Therefore be alert! Be Awake!

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

(4)
आशाया बध्यते जन्तुः कर्मणा बहुचिन्तया।
आयु क्षीणँ न जानाति तस्मात् जाग्रत जाग्रत॥

“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

We are [The animal -humans are also addressed as animals here] bound by Expectations: various activities and excess thinking. so much so that we do not recognize the ebbing away of life. Therefore be awake! Be Awake!

ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை கட்டுபவர்கள்... அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.

(5)
सम्पदः स्वप्नसँकाशाः यौवनँ कुसुमोपम्।
विधुच्चन्चचँल आयुषँ तस्मात् जाग्रत जाग्रत॥

All possessions are like what are seen in a dream, youthfulness is only for a short time , like a flower's lifetime. Life passes away like a lightening therefore be alert!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல ... நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,.

(6)
क्षणँ वित्तँ क्षणँ चित्तँ क्षणँ जीवितमावयोः।
यमस्य करूणा नास्ति तस्मात् जाग्रत जाग्रत॥

Money, memory and life are all momentary. Lord Yama, the lord of death, does not show any mercy. Therefore be awake!!

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை

(7)
यावत् कालँ भवेत् कर्म तावत् तिष्ठन्ति जन्तवः।
तस्मिन् क्षीणे विन्श्यन्ति तत्र का परिदेवना॥

As long as their karma lasts so long we see the animal here, the moment the karma is over, the animal is gone. what is there to brood over this ?

சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான்.இதில் என்ன யோசிக்க இருக்கிறது.மேடையில் ஏறியாயிற்று, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.....

கர்ம வினைகள் ஓர் அலசல்


உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? . ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்ம வினை" தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் சர்க்கரை நோயாளியாக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே


துறவு என்பது ஞானமடைதலுக்கான வழி.

இது தோற்றங்களிலிருந்து விடுபட வைக்கிறது.

 இந்த வழியின் சாராம்சம் ஒட்டாதிருப்பது.

அதாவது துறவு.

போதி தர்மன் சொன்னான்.....

புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று.....

யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை.

அவரின் இருப்பே சிரிப்புதான்.

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு.

உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும் ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு துன்பம் நேரலாம் என்ற மனநிலையில் ஏதாவது ‘அபத்தமாக’ நடந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள்.

அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது துன்பத்தை மறக்க. டென்ஷன் மறைகிறது.

சிரிப்பு ஆரோக்கியமானது.

நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறது.

ஆனால் அதுவும் நிமிடத்துக்குத்தான்.

பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்.

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ.....

அதனால் ஆனதே இந்த வாழ்வும்.

ஆனால் கனவை நீ ஒரு மாயை என்கிறாய்...

நனவை 'மிகுந்த சிரமப்பட்டு' தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய் .

கனவுக்கும் நீ நினைவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை.

இந்த உலகில் வாழ்.

ஆனால் இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது.

நினைவிருக்கட்டும்.

இது எல்லாமே அழகான கனவுதான்.

இந்த வாழ்வு என்பது மாறிக்கொண்டும் மறைந்துகொண்டும் தோன்றிக் கொண்டும் இருக்கிறது.

கனவும் அப்படித்தானே.......!!!

அதனால் இந்த நினைவுடன் ஒட்டிக் கொண்டிராதே

எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி.

ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது.

அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில் ‘அபரிமிதமான ஆற்றல்’ விடுபடுகிறது.

இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால் சிறைபட்டுள்ள அந்த ஆற்றல்

ஒரு புதிய உதயத்தை,

புதிய இருப்பை,

புதிய ஒளியை,

புதிய புரிதலை உனக்குள் கொண்டுவரும்.

பிறகு துன்பம் என்பதே இல்லை.

இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான.....

இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய்.

உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும்.

அதைத்தான் போதிதர்மன் சொன்னான்.

"புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே"

- ஓஷோ.

தியானத்திற்கு தடை மனமே


நீங்கள் கண்களை மூடி தியானம்
செய்ய ஆரம்பபத்தீர்கள் என்றால்
சிறிது நேரத்தில் சோர்வு வரும் , சலிப்பு வரும் ,
உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம்
வரும் .

உங்களால் சிறுது நேரம் கூட கண்ணை மூடி
உட்கார முடியாது ..

 காரணம் என்ன ,
நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம்
மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது .

தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை ,
பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம்
செய்ய விடாது ..

 நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை ,
தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு , சலிப்பு ,
வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள் ..

இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க
செய்யும் அதன் தந்திரம்
இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .

இதிலேயே தான்
பெரும்பாலனோர் தியானம் அமைகிறது.
இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும்
எனக்கு நிம்மதி , மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.

இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது
தியானமே ஆகாது .

மனம் செய்யும் வித்தைகளை எல்லாம்
நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால்
மனம் அடங்கி விடும் ..

 உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக
மனம் மாறிவிடும் . ..
 இப்போது மனம் மூலம் செயல்படும்
தியானத்திற்கு பிறகு நீங்கள்
மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள் .

அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம்,
துக்கம், மன அழுத்தம் , போர் தன்மை , சலிப்பு
எல்லாம் ஆவியாக மறைந்து விடும்.
கொண்டாட்டம்,ஆனந்தம் என்கிற வார்த்தையின்
உண்மையான பொருள் அப்போது புரிய வரும் .

நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் நீங்கள்
எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ,
உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக
கொண்டாட்டமாக இருக்கும் ..

ஆசையே இன்பங்களுக்கு காரணம்


பிரம்ம தத்துவத்தில் இருக்கும் ஆன்மா.. எப்பொழுது இந்த பூமியில் மனித உடலெடுத்து நடிக்கவேண்டும் என்பதை உணர்கின்றதோ.. அப்பொழுதே பூமியை நோக்கி பிரம்மதத்துவம் விட்டு புறப்பட ஆரம்பித்து விடுகின்றது..

ஆசை இன்று பூமியில் நீங்கள் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் ஆசையினால்தான் உருவாக்கப் பட்டது.. ஆசை இல்லையென்றால் நான்.. நீங்கள்..ஏன்..இந்த உலகமே இல்லை..

புத்தர் கூட ஆசையினால் தான் ஞானத்தை தேட ஆரம்பித்தார்.. அது அவருடைய ஆசை.. மனிதனாக பிறந்தவனுக்கு ஆசை இல்லை என்றால் அவன் இந்த பூமிக்கு வந்ததில் அர்த்தமே இல்லை..

கடவுள் கூட பூமிக்கு வருவது...குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்யும் ஆசையில் தான் பூமிக்கு வருகின்றார் அதாவது அதர்மத்தை அழித்து சத்திய தர்மத்தை ஸ்தாபனை செய்ய..தன்னுடைய குழந்தைகளை சந்திக்க.. பக்தர்களை சந்திக்க இப்படி ஒரு ஆசை..

ஏனென்றால் பகவானின் மீது நாம் வைத்த ஆசை அவரை இந்த உலகிற்கு அவரை ஆசைப்பட்டு அழைத்து வந்துவிட்டது.. சரி.. இதுவரை..சொன்னது அனைத்துமே நல்ல ஆசைகள்..நன்றாக படிக்க வேண்டும்.. தாய்..தந்தையருக்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும்..

உயர்ந்த பதவி அடைய வேண்டும்.. அனைவரது நல் விருப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும்.. கடவுளை பின்பற்றி நடக்கவேண்டும் இவை அனைத்தும் நல்ல ஆசைகள்..

இதன் பிறகு தீய ஆசைகள்..மனித வரம்பில் எதெல்லாம் செய்ய கூடாதோ..அதை தான் தீய ஆசை என்று சொல்லப்படுகின்றது.. இந்த தீய ஆசைகளின் இன்னொரு பெயர்தான் "இச்சை"-இந்த இச்சைதான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.இந்த இச்சைக்குள் தான் காமம்,கோபம்,பேராசை, பற்று, அகங்காரம்..இப்படி தீய குணங்கள் டென்ட் அடித்து தங்கியிருக்கின்றன..

இந்த இச்சையை வென்றவர்தான்.. மாயையை வென்றவர்.. முதலில் இச்சை கண்களின் வழியாக மனதிற்கு சென்று அதை எண்ணமாக உருவாக்குகின்றது.. அந்த எண்ணத்தை புத்தி ஏற்றுக்கொண்டு.. அது அந்த செயலை செய்யும் சமஸ்காரத்தை உருவாக்குகின்றது.. பிறகு அது செயலாக மாறி பாவத்தின் கணக்கை உருவாக்குகின்றது..இந்த பாவ கணக்கை செய்யும் முன்..ஏற்கனவே செய்த நன்மைகள் மனதில் இருந்து எச்சரிக்கின்றன..

இது வேண்டாம்..இதனால் தீமை என்பதை அறிவுறுத்துகின்றன..இதைதான் மனிதர்கள் மனசாட்சி என்று சொல்கின்றனர்..உடலில் உள்ள வெள்ளை அனுக்கள்.. சிவப்பனுக்கள் போல..ஒரு பாவ செயலை செய்யும் பொழுது எச்சரிக்கும் உள் மனம்.. பாவத்தின் வசமாகும் பொழுது நல்லவைகள் அங்கே இருந்து காலி பண்ண ஆரம்பிக்கின்றன.. ஏனென்றால் இனி இங்கே குடியிருக்க முடியாது என்பது தெரிந்து விடுகின்றது..

தீயவை வரும்பொழுது எச்சரிக்கும் உள் மனம் என்ற மனசாட்சி..அதன் பிறகு அமைதி ஆகிவிடுவதன் காரணம் இதுதான்..அது அந்த இடத்தை காலி செய்து விட்டது.. இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் எச்சரிக்கும் உள்மனம் அதன் பிறகு எச்சரிக்கை செய்யாவிட்டால் புரிந்து கொள்ளுங்கள்.. அது அங்கே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டது பிறகு, ஆத்திரப்பட்டு...அடிபட்டு..இதெல்லாம் நல்லதல்ல என புரிந்து மீண்டும் நல்லவற்றை குடி அமர்த்த எவ்வளவு நாட்களாகும் என்று நினைத்து பாருங்கள்..

இதற்க்கெல்லாம் மூல காரணம் இச்சை என்று சொல்கின்றோமே அந்த தீய ஆசைகள்தான் காரணம்..இது எங்கே இருந்து புறப்பட்டது.. கண்..எனவே இறைவன் சிவபெருமானும்,இந்த கண்களை குற்றம் அற்றதாக மாற்றிவிடுங்கள் என்று சொல்கின்றார்.கண்களை குற்றம் அற்றதாக மாற்ற உங்களுடைய ஆன்மா என்ற கண்ணை விழிப்புடன் வையுங்கள்.. ஏனென்றால்.. உலகில் கூட சொல்வார்கள் ஏதாவது சண்டை வந்து விட்டால்..

அவரது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை இங்கிருந்து போக சொல்லுங்கள் என்று..தேகத்தை பார்ப்பதால் தான் அனைத்து குற்றங்களும் விளைகின்றன எனவே, தன்னை ஒரு ஆன்மாவாக புரிந்து மற்றவர்களையும் ஆன்மா என்ற ரீதியில் நெற்றியின் நடுவே மின்னும் சின்னஞ்சிறிய நட்சத்திரம் என்று புரிந்துகொள்ளவேண்டும்..

இதனால் குற்றப்பார்வை அழிந்து கண்கள் குற்றமற்றதாகிவிடும்..சிவபெருமான் பிரம்மாவின் உடலில் பிரவேசித்து அவரது நெற்றியின் மூலம் நம்முடைய நெற்றியில் ஆன்மா என்ற கண்ணை திறந்துள்ளார்.இதை எப்பொழுதும் விழிப்புடன் வைத்திருப்பவர்க்கு எல்லாமே சுபம்..

வாழ்த்துக்கள்..

இருப்பு நிலை - ஓஷோ


உண்மையை அறிய எல்லாப் பொய்மைகளையும் மாயைகளையும் நீங்கள் விட்டு விட வேண்டும்.

அந்தப் பொய்மைகளில் மிகப் பெரியது " நான் " என்ற அகங்காரம்தான்.

கடவுளை நம்புவதற்கு அவரை அறிய வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் கடவுளை அறிந்த பிறகு நம்புவதற்கு ஒன்றும் இல்லை.

உங்களுடைய நான் என்ற மறைவே கடவுளின் உதயமாகும்.

கடவுள் என்பது.....
வாழ்வு,
அன்பு,
ஒளி,
பேரியக்க பிரபஞ்ச அனுபவம்,
உங்களது உள் உணர்வு,
உங்கள் உள்ளே மலரும் நறுமணம்

கடவுள் என்ற மலரை நீங்கள் பார்க்க முடியாது

அதன் நறுமணத்தை நீங்கள் நுகரலாம்.

எல்லாமே தெய்வீகம்தான்

இந்த.......
மலர்கள்,
பறவைகள்,
பாறைகள்,
ஆறுகள்,
மரங்கள்,
இவைகள் யாவும்
கடவுட் தன்மையுடன் மிளிர்கின்றன.

நீங்கள் உண்மையை அறிந்து கொள்ளுவதை நம்பிக்கை தடுக்கிறது.

பொய்யான நம்பிக்கைகளால் மக்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியாத போது

கடவுள் யார் என்று எப்படி உங்களுக்குத் தெரிய போகிறது.......???

கடவுள் உங்களுக்கு மிக அருகில் இதயத்தின் வழியாகவும் மூச்சின் வழியாகவும் தன்னை உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் உங்கள் பயத்தில் இருந்து உருவானவைகள் தான்

அவைகள் உங்கள்......
அன்பிலிருந்தோ,
உண்மையை அறிந்ததிலிருந்தோ,
சொந்த அனுபவத்தில் இருந்தோ,
உண்டானதில்லை

- ஓஷோ.